கொரோனோ முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் மாநகர முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice கொரோனோ முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் மாநகர முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice

கொரோனோ முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் மாநகர முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் தொடர்பாக முன்னேற்பாடுகள் தேவை என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஆளுநருக்கு இன்று (வியாழக்கிழமை) முதல்வரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்இ 'உலகில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கமானது வல்லரசு நாடுகளையே அச்சுறுத்தி ஆட்டங்காண வைத்துள்ளது. இந்நிலையில் இவ்வைரஸ் தாக்கமானது வடக்கு மாகாணத்தில் இதுவரை ஏற்படவில்லை என்ற சிந்தனையோடுஇ எவ்வித முன்னெச்சரிக்கையும்இ முன்னேற்பாடுகளுமின்றி அசமந்த போக்கில் இருக்கின்றோம் என எண்ணத்தோன்றுகின்றது.

எனவே இது தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் பின்வரும் விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

கடந்தஇ 17.03.2020 அன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பாக வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்இ சுகாதாரப் பணிப்பாளர்கள்இ சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள்இ வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள்இ வடமாகாண அனைத்துப் பிரதேச செயலர்கள்இ சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள்இ திணைக்களத் தலைவர்கள்இ உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் கூடிய கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் விதமாக எதிர்வரும் இரு வாரங்களுக்கு பொது மக்களின் தேவையற்ற நடமாட்டங்களை யாழ். நகர்ப் பகுதியில் மட்டுப்படுத்தும் விதமாக மக்களின் அத்தியவசியத் தேவைகளை நிறைவுசெய்யும் பலசரக்கு வியாபார நிலையங்கள்இ உணவகங்கள்இ மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்களை மூட உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே பாடசாலைகள்இ தனியார் வகுப்புக்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதிகளவில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில் குறித்த நோய்த் தாக்கத்தின் பின்னரும் யாழ். நகர்ப் பகுதியில் அதிகளவாக மக்கள் கூடுவதை நாம் கடந்த ஓரிரு நாட்களாக அவதானிக்க முடிகின்றது. அத்துடன் வெளிநாட்டவர்களின் நடமாட்டங்களையும் அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது.

மேலும்இ திறந்த வெளியில் உணவுப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் கடைகள் உணவகங்கள் குளிர்பான சாலைகள் மதுபான சாலைகள் சிகை மற்றும் அழகக ஒப்பனை நிலையங்கள் என்பவற்றை அடுத்த இரு வாரங்களுக்கு மூடுவதற்கான அறிவுறுத்தல்களை உரிய தரப்பினர்களுக்கு வழங்கியுதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்விடயம் தொடர்பாக தங்களின் விரைவான நடவடிக்கைகள் எம்மக்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் காத்திரமான பங்கை வகிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றேன்' என்றுள்ளது.

இதேவேளை இக்கடிதப் பிரதி யாழ். மாவட்டச் செயலகம்  வடக்கு மாகாண சுகாதார அமைச்சு யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாணளர் யாழ். மாநகரசபை ஆணையர்இ யாழ். மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி வணிகர் கழகத் தலைவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் ஆகியவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post