கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இடம் முற்றுகையிடப்பட்டு அவர் கலந்து கொண்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் யாழில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ் நகரை அண்மித்த ஐந்து சந்திப் பகுதியிலேயே அவர் தங்கியிருந்ததால் அந்தப் பகுதி முழுவதும் இன்று காலை முதல் முற்றுகையிடப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அங்குள்ள பலரையும் தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ நோய்த் தொற்று தாக்கத்தில் இலங்கையிலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த அவர் யாழ் ஐந்து சந்திப் பகுதியில் தங்கியிரந்துள்ளார். அத்தோடு திருமண நிகழ்வொன்றிலும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர் மீண்டும் கொழும்பு சென்றுள்ளார்.
ஆங்கு அவருக்கு நோய் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். ஆயினும் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய தொற்று நோயியல் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனோ தொற்றினாலேயே அவர் உயிரிழந்த நிலையில் அவர் தங்கியிருந்த மற்றும் சென்று வந்த இடங்கள் முற்றுகையிடப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு அவருடன் நிகழ:வுகளில் கலந்த கொண்டவர்களையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையிலையே அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்ததால் அவர் தங்கியிருந்த இடமும் சுற்றி வளைக்கப்பட்டு அவருடன் நிகழவுகளில் கலந்து கொண்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் பொலிஸார் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment