ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 10039 பேர் கைது, 2489 வாகனங்களும் பறிமுதல் - பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு - Yarl Voice ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 10039 பேர் கைது, 2489 வாகனங்களும் பறிமுதல் - பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு - Yarl Voice

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 10039 பேர் கைது, 2489 வாகனங்களும் பறிமுதல் - பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

இலங்கைய முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 10039 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 2489 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல நாட்களாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தில் ஊரடங்கை மீறுகின்றவர்களை பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.

இதற்கமைய இன்று மட்டும் 1000 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் ரோகண கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அவர்களிடம் மீறக் கையளிக்கப் போவதில்லை என்றும் அந்த வாகனங்களை கொரோனோ ஒழிப்பு வேலைத் திட்டத்திற்குப் பயன்படுத்தப் போவதாகவும் அவர்; குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post