கொழும்பு சென்று வருகின்ற 30 பேருக்கு பிசிஆர் பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - Yarl Voice கொழும்பு சென்று வருகின்ற 30 பேருக்கு பிசிஆர் பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - Yarl Voice

கொழும்பு சென்று வருகின்ற 30 பேருக்கு பிசிஆர் பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்புக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றிவரும் பாரவூர்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களில் முதல்கட்டமாக 30 பேருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து அத்தியாவசிய பொருள்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிவந்த பாரவூர்திகளின் சாரதிகள்இ உதவியாளர்கள் 30 பேரின் மாதிரிகள் நேற்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் பெறப்பட்டது.

 30 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வைத்து நேற்று பெறப்பட்டன. இதற்கமைய  30 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் கொரோனா தொற்று இல்லை என இன்று பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post