பலாலியில் தனிமைப்படுத்தப்பட்ட 4 பேர் உட்பட 27 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் - Yarl Voice பலாலியில் தனிமைப்படுத்தப்பட்ட 4 பேர் உட்பட 27 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் - Yarl Voice

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்ட 4 பேர் உட்பட 27 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர்

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருக்கின்ற நான்கு பேருக்கும் இன்று மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்டப் பரிசோதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டுள் 5 பேர் பலாலியில் உள்ள 4 பேர் உள்ளடங்கலாக யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட 27 பேருக்கான பரிசோதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனோ தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கான கொரோனோ தொற்று ஆய்வுகூடப் பரிசோதனைகள் யாழ் பல்கலைக்கழக மருத்தவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய இன்றும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இரந்த நான்கு பேர் உட்பட 27 பேருக்கு கொரோனோ தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பாக கொழும்பு வாழைத் தோட்டம் பகுதியிலிருந்து தற்போது தனிமைப்படுத்தப்பட்டு நேற்று மாலை வைத்தியசாலையில் அழைத்து வரப்பட்ட 5 பேர் உள்ளடங்கலாக 6 பேருக்கும், வைத்தியசாலை வெளிநோயாளர் பரிசோதிக்கப்பட்டவர்கள் 4 பேருக்கும், கிளிநொச்சி பொது வைத்தியசாலை ஒருவருக்கும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்குமாக 27 பேருக்கு இன்று பரிசொதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 8 பேரில் 4 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நான்கு பேருக்கும் இன்று மூன்றாம் கட்டப் பரிசொதனை மேற்கொள்ளப்பட்டது.

அதே போன்றே கொழும்பு வாழைத் தோட்டம் பகுதியிலிருந்து வந்தடி 5 பேருக்கும் இன்று பரிசொதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆயினும் இவர்களில் ஒருவருக்கும் கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது பரிசொதனைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post