யாழில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி உமாச்சந்திரா பிரகாஷ் ஐனாபதியின் செயலாளருக்கு கடிதம் - Yarl Voice யாழில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி உமாச்சந்திரா பிரகாஷ் ஐனாபதியின் செயலாளருக்கு கடிதம் - Yarl Voice

யாழில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி உமாச்சந்திரா பிரகாஷ் ஐனாபதியின் செயலாளருக்கு கடிதம்

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

உடனடியாக தீர்வு காணப்படவேண்டிய சில விடயங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் உமாச்சந்திரா பிரகாஷ் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

பல்வேறு காரணங்களுக்காக வருகை தந்து தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள சுமார் 3000 பேரை கொரோனா தொற்று வழிமுறைகளை பின்பற்றி அவர்களது சொந்த இடங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்க ஆவண செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய விலை கிடைக்காமையால் செய்கையாளர்கள் தமது அறுவடையை கால்நடைகளுக்கு உணவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அரிசி பருப்பு ரின் மீன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நிர்ணய விலையில் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ள அவர்இ அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உலர் உணவு நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறும் உமாச்சந்திரா பிரகாஷ் ஜனாதிபதியின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post