கொரோனோ தொற்று வவுனியாவிலும் ஒருவர் அடையாளம் - தொற்றாளர்கள் 484 ஆக அதிகரிப்பு - Yarl Voice கொரோனோ தொற்று வவுனியாவிலும் ஒருவர் அடையாளம் - தொற்றாளர்கள் 484 ஆக அதிகரிப்பு - Yarl Voice

கொரோனோ தொற்று வவுனியாவிலும் ஒருவர் அடையாளம் - தொற்றாளர்கள் 484 ஆக அதிகரிப்பு

கொரோனோ வைரஸ் தொற்றில் வவுனியாவிலும் இன்று ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருவருடன் இலங்கையில் இதுவரையில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கமைய இன்றும் பலருக்கும் தொற்று இருப்பது பரிசொதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளி மாகாணங்களில் இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் வடக்கில் வவுனியாவிலும் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் இன்று இனங்காணப்பட்டார்.

வெளிசற கடற்படை முகாமில் இருந்து வீடு திரும்பிய வவுனியாவை சேர்ந்த சிப்பாயின் இரத்த மாதிரி வவுனியா வைத்தியசாலையில் பரிசோதித்த போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post