யாழில் ஊரடங்கு நேரத்தில் ஆலயமொன்றில் பூசை வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் கைது - Yarl Voice யாழில் ஊரடங்கு நேரத்தில் ஆலயமொன்றில் பூசை வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் கைது - Yarl Voice

யாழில் ஊரடங்கு நேரத்தில் ஆலயமொன்றில் பூசை வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் கைது

யாழில் ஊரடங்கு நேரத்தில் ஆலயத்தில் பூசை  வழிபாட்டில் ஈடுபட்டவர்கள்  யாழ்ப்பாண பொலிஸாரால்  இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நகரை அண்மித்த அத்தியடி பிள்ளையார் கோவிலில் சதுர்த்தி பூசை நடாத்தப்பட்டுள்ளது. இந்தப் பூசை  வழிபாட்டில் ஈடுபட்டவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பூசை நடாத்திய பிரதம குரு மற்றும் அப் பிரதேசத்தைச் சேர்ந்த வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரையும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்த பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த நிலையிலையே இந்த வழிபாடு நடாத்தப்பட்டுள்ளதாலே வழிபாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post