இரானுவத்தின் தனிமைப்படுத்தல் நிலையமாக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரி - அச்சமடைய தேவையில்லை என்கிறது இரானுவம் - Yarl Voice இரானுவத்தின் தனிமைப்படுத்தல் நிலையமாக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரி - அச்சமடைய தேவையில்லை என்கிறது இரானுவம் - Yarl Voice

இரானுவத்தின் தனிமைப்படுத்தல் நிலையமாக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரி - அச்சமடைய தேவையில்லை என்கிறது இரானுவம்

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரியில் படையினரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனோ தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் விடுமுறைக்காகச் சென்ற படையினர் அனைவரையும் மீள அந்தந்த முகாம்களுக்குச் செல்லுாமான இன்று மாலை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விடுமுறை சென்ற படையினர் அனைவரும் தாம் தங்கியிரந்த முகாம் பகுதிகளுக்கு வர உள்ளனர். கொரோனோ அச்சம் காரணமாக அவ்வாறு வருகின்ற படையினரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற படையினரை கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரியில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கல்லுாரியின் இரண்டு விடுதிகளை தற்பொது படையினர் பொறுப்பெடுத்துள்ளனர். இதனையடுத்து யாழ் வருகின்ற படையினர் அந்த விடுதிகளில் வைத்து தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் விடுமறையில் சென்ற படையினர் அனைவரையுமு் 21 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே இரானுவத்தினர் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

இதேவேளை கொரோனோ தொற்றுடைய எவரையும் இங்கு தனிமைப்படுத்தவில்லை என்றும் விடுமறையில் சென்றவர்களையே தற்போது தனிமைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ள இரர்னுவத்தினர் இது தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post