இலங்கையில் முப்படையினரையும் ஆக்கிரமிக்கும் கொரோனோ - தொற்றாளர்கள் 585 ஆக அதிகரிப்பு - Yarl Voice இலங்கையில் முப்படையினரையும் ஆக்கிரமிக்கும் கொரோனோ - தொற்றாளர்கள் 585 ஆக அதிகரிப்பு - Yarl Voice

இலங்கையில் முப்படையினரையும் ஆக்கிரமிக்கும் கொரோனோ - தொற்றாளர்கள் 585 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக நேற்று மட்டும் 65 பேர் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 588 ஆக அதிகரித்துள்ளது.

 நாட்டில் கடற்படை விமானப்படை தரப்படை என முப்படையினருக்கும் கொரோனோ தொற்று இணங்காணப்பட்டுள்ளது.  இதில் நேற்றையதினம் இணங்காணப்பட்டவர்களில் பலர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் வெலிசர கடற்படை முகாமின் சிப்பாய்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா  தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமானப் படை முகாமில் உள்ள சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post