ஊரடங்கு உத்தரவு நடைமுறைியலுள்ள காலப் பகுதியில் யாழ் நகர்ப்பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டத்திற்கு புறம்பான வகையில் மதுபான விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தை பொலிஸார் இன்று காலை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் போது மதுபான விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மதுப் போத்தல்களையும் மீட்டுச் சென்றுள்ளனர்.
யாழ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழுள்ள விசெட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையிலையே இப் போத்தல்கள் மீட்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றதாகவும் அறிவித்துள்ளனர்.
இதே வேளை கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மதுபான சாலைகளையும் மூடுமாறு அரசாங்கத் உத்தரவிட்டிருந்த நிலையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மதுபான விற்பனைஐயு பொலிஸார் சுற்றிவளைத்து பிடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment