பாடசாலை மாணவர்கள் ஆசரியர்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice பாடசாலை மாணவர்கள் ஆசரியர்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice

பாடசாலை மாணவர்கள் ஆசரியர்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கி வைப்பு

சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்பிற்கும் ஆசிரியர்களுக்கும் போசாக்கு உணவுகள் உள்ளடங்கிய அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர் வித்தியாசாலையின் உள்ளூர் மற்றும் புலம்பெயர் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் இந்த போசாக்கு பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் பழைய மாணவரும் வலிதெற்கு பிரதேச சபைத் தலைவருமான க.தர்ஷன் மற்றும் பழைய மாணவர் சங்க பிரதிநிதி கு.தயாநந்தன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நேற்று மாலை வரியப்புலம்  மகாமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் வைத்து மாணவர்களின் பெற்றோரிடம் போசாக்கு பொதிகள் வழங்கப்பட்டன.

 திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் கல்வி பயிலும் 63 மாணவர்களுக்கும் கற்பிக்கும் 7 ஆசிரியர்களுக்கும் என மொத்தம் 70 பேரிற்கு தலா 3500 ரூபா பெறுமதியான போசாக்கு உணவுகள் அடங்கிய அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

இதன்போது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post