யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 7 நோயாளர்களின் உடல் நலம் தேறி வருவதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று அற்ற சுயதேகிகளாக வீடுகளுக்கு திரும்புவார்கள் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில்இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகரினால் யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை மருத்துவ பரிசோதணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட முதலாவது கொரோன நோயாளி ஜ.டி.எச் வைத்திய சாலைக்கும் இதன் பின்னர் இனங்காணப்பட்ட 6 பேரும் பெலநறுவை வைத்தய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்கா அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவர்கள் 7 பேருடைய உடல் நலம் தேறி வருவதாக குறித்த இரு வைத்திய சாலையின் பணிப்பாளர்களும் உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் முழுமையான சிகிச்சை முடிந்த பின் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் சுகதேகிகளாக வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.

Post a Comment