யாழ் பல்கலையில் நடத்தப்படுவது போன்று விரைவில் யாழ் போதனாவிலும் கொரோனோ பரிசோதனை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice யாழ் பல்கலையில் நடத்தப்படுவது போன்று விரைவில் யாழ் போதனாவிலும் கொரோனோ பரிசோதனை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice

யாழ் பல்கலையில் நடத்தப்படுவது போன்று விரைவில் யாழ் போதனாவிலும் கொரோனோ பரிசோதனை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு

யாழ்.போதனா வைத்தய சாலையிலும் மிக விரைவில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துவ ஆய்வுகூட பரிசோதணை மேற்கொள்ப்படும் என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதன் மூலம் எதிர்வரும் வாரங்களில் ஒரு நாளில் 144 பேருக்கு இப் பரிசோதணை மேற்கொள்ளும் வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்.பல்கலைக்கழ மருத்துவ பீடமும்இ யாழ்.போதனா வைத்திய சாலையும் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதணை (ரி.சி.ஆர் இயந்திர பரிசோதணை) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் ஒரு தடவையில் 24 பேருக்கு குறித்த பரிசோதணை செய்ய முடியும். இவ்வாறு ஒரு நாளில் 3 தடவையாக 72 பேருக்கான பரிசோதணை மேற்கொள்ள முடியும்.

தற்போது சுகாதார அமைச்சு யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள ரி.சி.ஆர் இயந்திரத்தினையும் இயங்கு நிலையில் வைத்திருக்குமாறு எமக்கு அறிவித்துள்ளது.

குறித்த இயந்திரம் வைத்திய சாலையில் செயற்படுமாக இருந்தால் ஒரு நாளில் 72 பேருக்கான பரிசோதணை மேற்கொள்ள முடியும்.

யாழ்.போதனா வைத்திய சாலையிலும் யாழ்.பல்கலைக்கழக மருத்துப பீடத்திலும் குறித்த பரிசோதணை மேற்கொள்ளப்படுமாயின் ஒரு நாளில் 144 பேருக்கான பரிசோதணைகளை செய்து கொள்ளக்கூடிய வசதி ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post