யாழ்.சாவகச்சோி- மீசாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை நுழைந்த கொள்ளையா்கள் வீட்டில் தனித்திருந்த வயோதிப தம்பதியை தாக்கி படுகாயப்படுத்திவிட்டு நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனா்.
அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது மீசாலை சோலையம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள குறித்த வீட்டுக்குள் நுழைவதற்காக வீட்டின் முன் பகுதி வழியாக கூரையை பிாித்த திருடா்கள்
வீட்டுக்குள் நுழைய முயற்சித்துள்ளனா். எனினும் நுழைய முடியாத நிலையில்இ சமயலறை புகைகூண்டை உடைத்து உள்நுழைய முயற்சித்துள்ளனா். அதுவும் முடியாமல்போன நிலையில் வீட்டுக்கு பின்னால் இருந்த ஏணியின் மூலம் எறி கூரையை பிாித்து உள்நுழைந்து.
வீட்டிலிருந்த வயதான தம்பதியை கோடரியால் தாக்கிய கொள்ளையா்கள் 15 ஆயிரம் ரூபாய் பணம் மோதிரம் சங்கலி தேடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனா்.
இந்நிலையில் படுகாயமடைந்த வயோதிப தம்பதியை அயவலா்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனா். சம்பவம் தொடா்பாக சாவகச்சோி பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
Post a Comment