கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் தப்பி வந்தவர் அடையாளம் - சுயதனிமைப்படுத்தி விசாரணை - Yarl Voice கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் தப்பி வந்தவர் அடையாளம் - சுயதனிமைப்படுத்தி விசாரணை - Yarl Voice

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் தப்பி வந்தவர் அடையாளம் - சுயதனிமைப்படுத்தி விசாரணை

கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு  டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர் மரக்கறிபாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாறு தப்பி வந்தவரை தேடிக் கண்டறிந்த வலி.மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள்இ அவரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்தயாழ்ப்பாணம் தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய பின் வீதியைச் சேர்ந்த கொழும்பில் புத்தகக் கடையில் பணியாற்றும் 30 வயதுடைய ஒருவரே சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு பொருள்களை ஏற்றி வந்த பாரவூர்தியிலேயே அவர் தப்பி வந்துள்ளார்.

தகவலறிந்த வலி.மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள்இ அவரைத் தேடிக் கண்டறிந்து வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியுள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் தொடர்பில்  வட்டுக்கோட்டை பொலிசாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post