வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு யாழ் மாவட்டச் செயலகத்தில் கொரோனோ பரிசோதனை - Yarl Voice வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு யாழ் மாவட்டச் செயலகத்தில் கொரோனோ பரிசோதனை - Yarl Voice

வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு யாழ் மாவட்டச் செயலகத்தில் கொரோனோ பரிசோதனை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தோருக்கான கொரோனா பி.சி.ஆர். பரிசோதனை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிவந்த லொறிகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த பரிசோதனை இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

இன்று 30 பேருக்கு குறித்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post