புலம்பெயர் மக்களின் நிதி உதவியில் மருதங்கேணி பிரததேசத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் - Yarl Voice புலம்பெயர் மக்களின் நிதி உதவியில் மருதங்கேணி பிரததேசத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் - Yarl Voice

புலம்பெயர் மக்களின் நிதி உதவியில் மருதங்கேணி பிரததேசத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியில் மருதங்கேணி  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அப் பிரதேச செயலர் பிரிவின் கேவில வெற்றிலைகேணி ஆழியவளை உடுத்துறை வத்திராயன் மருதங்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 150 பயனாளிகளுக்கு  அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் கடந்த 07.04.2020 அன்று வழங்கப்பட்டது.

நாளாந்த கூலி வேலை செய்யும்  குடும்பங்கள் மற்றும் சீவல் தொழில் செய்யும் குடும்பங்கள் மற்றும் மீன்பிடி தொழில் இன்மையால் பாதிக்கப்பட்டு  மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

மேற்படி உதவியை வழங்குவதற்கான நிதி உதவியை வழங்கிய புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இவ் உதவியை பெற்றுத் தந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பெர்னனம்பலம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post