இருபதாயிரம் ரூபாவிற்குக் குறையாத இடர்காலக் கொடுப்பனவை வழங்கக் கோரிக்கை - டெலோவின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் - Yarl Voice இருபதாயிரம் ரூபாவிற்குக் குறையாத இடர்காலக் கொடுப்பனவை வழங்கக் கோரிக்கை - டெலோவின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் - Yarl Voice

இருபதாயிரம் ரூபாவிற்குக் குறையாத இடர்காலக் கொடுப்பனவை வழங்கக் கோரிக்கை - டெலோவின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர்

இலங்கையில் இன்றைய இடர் கால சூழலில் அரசாங்க வங்கி கூட்டுத்தாபன நிரந்தர சம்பளம் பெறும் ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய நிரந்தர சம்பளம் பெறாத குடும்பங்கள் அனைத்திற்கும் இருபதாயிரம் ரூபாவிற்குக் குறையாத இடர் கால கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) நிர்வாகச் செயலாளரும் திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய பரமலிங்கம் நித்தியானந்தம் (நித்தி மாஸ்டர்) அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அரச ஊழியர்கள் மார்ச்இ ஏப்ரல் மாத சம்பளங்களைப் பெற்றிருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் ஓரளவு நாளாந்தம் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் நிரந்தர சம்பளம் அற்ற குடும்பங்கள் பெரும் பட்டினிச் சாவின் விளிம்பில்  நிற்கின்றனர்.

அரசாங்க நிவாரணங்கள் ஒழுங்காகக் கிடைக்காத போதும் ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள சமூக சேவை நிறுவனங்களினதும் இளைஞர் குழுக்களினதும் அரசியற் கட்சிகளினதும் சிறிய நிவாரணப் பணியே இம் மக்களை ஓரளவு பட்டினிச் சாவிலிருந்து காத்துவருகிறது. இந்நிலை தொடர முடியாது.

குறிப்பாக யுத்தத்தினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் பூரணமாக மீள முடியாத வகையிலேயே வடகிழக்கில் உள்ளனர். எனவே சகல அரசியற் கட்சிகளும் ஒன்றிணைந்து இவ் வறிய மக்களின் பட்டினிச் சாவைத் தவிர்க்க இவர்களுக்கு இடர் காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசை வற்புறுத்த வேண்டும் என நித்தி மாஸ்டர் கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post