அர்ப்பணிப்பை மதித்து மனிதநேயத்ததுடன் நடந்து கொள்ள வேண்டும் - தமிழக முதல்வர் வலியுறுத்து - Yarl Voice அர்ப்பணிப்பை மதித்து மனிதநேயத்ததுடன் நடந்து கொள்ள வேண்டும் - தமிழக முதல்வர் வலியுறுத்து - Yarl Voice

அர்ப்பணிப்பை மதித்து மனிதநேயத்ததுடன் நடந்து கொள்ள வேண்டும் - தமிழக முதல்வர் வலியுறுத்து

நாம் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்காக போராடும் மருத்துவர்களை இது அவமதிக்கும் செயல் என்றும்இ மனிதநேயமற்ற செயல் என்றும் பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள முதலமைச்சர் 'கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது.

நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.' என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post