பொதுத் தேர்தல் தேர்தல் நடாத்த வேண்டாம் - இரானுவ ஆட்சியே நல்லது - ஞானசாரதேரர் தெரிவிப்பு - Yarl Voice பொதுத் தேர்தல் தேர்தல் நடாத்த வேண்டாம் - இரானுவ ஆட்சியே நல்லது - ஞானசாரதேரர் தெரிவிப்பு - Yarl Voice

பொதுத் தேர்தல் தேர்தல் நடாத்த வேண்டாம் - இரானுவ ஆட்சியே நல்லது - ஞானசாரதேரர் தெரிவிப்பு

பொதுத் தேர்தலை நடத்தாமல் குறைந்தது 5 மாதங்களுக்காவது ஒத்திவைக்கும்படி பொதுபல சேனா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் பேசிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளராகிய ஞானசார தேரர் இக்கோரிக்கையை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பொதுத் தேர்தலை இப்போதைக்கு நடத்தாமலிருப்பதே நல்லது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.

2010 2015ஆம் ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் அதிகார மமதையில் செயற்பட்டனர். அதுபோல கோட்டாபய ஜனாதிபதியும் செயற்படுகிறாரோ என்கிற சந்தேகம் மலர்கிறது. அப்படி மாறிவிடக்கூடாது.

நாட்டில் இராணுவ ஆட்சி வந்தால் நல்லது என்ற சிங்கள மக்களின் உணர்வை அரசாங்கம் புரிந்துகொள்ளவும் வேண்டும். அதற்காக தேர்தல் வேண்டாம் எனக் கூறவில்லை. ஒத்திவைத்தாலே போதும் என்று அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post