யாழ். வர்த்தகர்களுக்கான பாஸ் அனுமதி மீளாய்வு செய்ய வேண்டி ஏற்படும் - அரச அதிபர் எச்சரிக்கை - Yarl Voice யாழ். வர்த்தகர்களுக்கான பாஸ் அனுமதி மீளாய்வு செய்ய வேண்டி ஏற்படும் - அரச அதிபர் எச்சரிக்கை - Yarl Voice

யாழ். வர்த்தகர்களுக்கான பாஸ் அனுமதி மீளாய்வு செய்ய வேண்டி ஏற்படும் - அரச அதிபர் எச்சரிக்கை

ஊரடங்கு நேரத்தில் வெளிமாவட்டங்கள் பயணிப்பதற்கு யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ் அனுமதியை சரியான முறையில் வர்த்தகர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அந்த அனுமதிகள் மீளாய்வு செய்ய வேண்டி ஏற்படுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பல இடங்களிலும் தொடர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் இருக்கிறது.

ஆகையினால் அத்தியாசியப் பொருட்களின் தேவைப்பாடு கருதி அந்தப் பொருட்களை ஏற்றுவதற்காக யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு வெளிமாவட்டங்கள் செல்வதற்காக பாஸ் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையினால் அவ்வாறு கொடுக்கப்பட்ட அனுமதியை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பயன்படுத்த வேண்டும்.

இதனை விடுத்து அந்த அனுமதியை துஸ்பிரயோகசம் செய்யக் கூடாது. அவ்வாறாக தவறான முறையில் அதனைப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது. ஏன் எனில் வர்தகர்களுக்கு வழங்கிய பாஸ் அனுமதியை பயன்படுத்தி யாழிலிருந்து சென்ற பாரஊர்தி ஒன்றில் தான் கொழும்பிலிருந்து சிலர் மறைந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர்.

இதனால் மாவட்டத்திற்காக அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து நிலைமை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆகையினால் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டிது என்பதுடன் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியதும் அவசியமானது. அதுவே மிகவும் பொருத்தமான செயற்பாடாக அமையும்.

எனவே மக்கள் நலன் கருதி வழங்கிய பாஸ் அனுமதியை தவறாக பயன்படுத்த வேண்டாம் என வர்த்தகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். இந்த அனுமுதியை தவறாகப் பயன்படுத்துகின்ற நிலைமைகள் தொடர்ந்தால் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி ஏற்படுமென்றும் அதிலும் குறிப்பாக அனுமதியை வழங்குவது குறித்து மீளாய்வு செய்யப்படுமென்று அரச அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே வர்தகர்கள் வாகன உரிமையாளர்கள் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட வேண்டும். அதிலும் வர்த்தகர்கள் தங்கள் பணியாளர்களுக்கு சரியான அறிவுறுத்தல்களை வழங்கி உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் உணர்த்த வேண்டும். ஆகையினால் வர்த்தகர்கள் வாகன சாரிதிகள் என அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post