வடக்கில் உணவு கையாளும் நிறுவனங்களுக்கு சுகாதாரப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவுறுத்தல் - Yarl Voice வடக்கில் உணவு கையாளும் நிறுவனங்களுக்கு சுகாதாரப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவுறுத்தல் - Yarl Voice

வடக்கில் உணவு கையாளும் நிறுவனங்களுக்கு சுகாதாரப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

கொரோனா தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்கு உணவு கையாளும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

தற்பொழுது மிகவும் ஆபத்தான கொரோனா தொற்று பரவிவருவதால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள உணவு கையாளும் ஒழுங்கு விதிகளை முற்றாக அமுல்படுத்துவதுடன் மேலதிகமாக கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக கீழ் குறிப்பிடப்ப ட்ட நடைமுறைகளை தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

1) உணவு கையாளும் நிலையத்தில் பின்பற்றவேண்டிய கொவைட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும்.

2) இயலுமானவரை உணவு வகைகளை வாங்கிச் சென்று உண்பதை ஊக்குவியுங்கள்.

3) உணவு கையாளும் நிறுவனத்தில் கடமையாற்றும் வேலையாட்கள் ஓடும்; நீரில் சவர்க்காரமிட்டு சரியான முறையில் 20 செக்கன்களாவது கைகளை கழுவுவது உறுதி செய்யப்படவேண்டும். உள் நுழையுமிடத்தில் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவுவதற்கான வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

4) உணவகத்தின் உள்ளே எப்போதும் இருவருக்கிடையில் 1 மீற்றர் ஃ 3 அடி இடைவெளியைப் பேணக் கூடியவாறாக இருக்கைகள் ஒழுங்கமைப்பட்டிருக்க வேண்டும்.

5) உணவு கையாளும் நிறுவனத்தில் கடமையிலுள்ள அனைவரும் முகக் கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

6) உணவு பரிமாறுபவர்கள்; வாடிக்கையாளர்கள்; கேட்கும் உணவை மாத்திரம் வழங்க வேண்டும்.

7) வாடிக்கையாளர் அமர்கின்ற இடத்தில் மேசையைத் துடைத்து தயார்ப்படுத்தல் உணவுத் தட்டை கழுவுதல் உணவைத் தட்டில் வைத்து பரிமாறுதல் ஆகிய செயல்களை தனித்தனியான வேலையாட்களே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவர்களை வாடிக்கையாளர்கள் அடையாளங் காணக்கூடியவாறாக வேறு வேறான சீருடைகளை அணிவது விரும்பத்தக்கது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் பயன்படுத்திய தளபாடங்கள் உடனடியாகவே தொற்று நீக்கி பாவித்து துடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

9) சிறிதளவேனும் காய்ச்சல் இருமல் தொண்டை நோ போன்ற கொரோனா தொற்றின் குணங்குறிகளுடைய வேலையாட்கள் எவரும் உணவு கையாளும் நிறுவனத்தினுள்ளோ வளவினுளளோ கடமையில் ஈடுபடலாகாது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post