பாராளுமன்றத்தைக் கூட்டினால் கொரோனோ ஒழிக்கப்படுமா? வரதராஐப்பெருமாள் கேள்வி - Yarl Voice பாராளுமன்றத்தைக் கூட்டினால் கொரோனோ ஒழிக்கப்படுமா? வரதராஐப்பெருமாள் கேள்வி - Yarl Voice

பாராளுமன்றத்தைக் கூட்டினால் கொரோனோ ஒழிக்கப்படுமா? வரதராஐப்பெருமாள் கேள்வி

பாராளுமன்றத்தை மீளக் கூட்டினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள வடக்கு கிழக்கு இணைந்த முன்னாள் மாகாண முதலமைச்சர் அ.வரதராஐப் பெருமாள் அரசியலுக்காக தங்களது வாய்சவாடல்களைக் காட்டவே பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தைக் கூட்டுவதால் பாராளுமுன்றம் ஊடாக எதனையும்; செய்வதில்லை. பாராளுமன்றம் ஒரு சட்டவாக்க நிறுவனம் மட்டும் தான். அங்கு சட்டம் ஆக்கலாம். அங்கு அரசியல்வாதிகள் பேசலாம். ஆனால் அங்கு கொரோனோ சம்மந்தமாக நிர்வகிப்பதற்கொ தேர்தல் நடாத்துவதற்கொ பாராளுமன்றதம் தான் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.

எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால் அதாவது பாராளுமுன்றத்தை விட மாகாண சபைகளளை செயற்பட வைப்பது மகிப் பிரதானமானது. ஏனெனில் மாகாண சபைகள் என்பது வெறும் பேசுகின்ற மேடைகளைக் கொண்ட நிறுவனம் அல்ல. மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகள் சுகாதார நடவடிக்கைகள் ல்லாம் பெரும்பாலும்; விசயங்கள் அதற்குள் தான் உள்ளது. அப்படிப்பட்ட நிறுவனங்களை கூட்ட வேண்டும். தேர்தல் இல்லாமல் அதனைக் கையாள வேண்டும். அது தான் இன்றைய தேவை.

ஆயினும் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியலுக்காகவே பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமேனக் கோருகின்றனர். ஏனெனில் தங்களுடைய அரசியலுக்கு இந்தப் பாராளுமன்றத்தைக் கூட்டினால் அடுத்தவரும் தேர்தலுக்கு அதனைப் பயன்படுத்த முனைகின்றனர். தங்கள் தங்கள் அரசியலுக்காகவெ பாராளுமன்றத்தை கூட்டு கூட்டு என எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர்.

ஆகவே அவ்வாறு பாராளுமன்றத்தைக் கூட்டுவதால் இந்த நாட்டில் என்ன நடக்கப் போகிறது. வெறுமனே பாராளுமன்றத்தைக் கூட்டினால் கொரோனோ பாதிப்பை நிறுத்த முடியுமா. பாராளுமன்றம் என்ன சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கமா அல்லது பொருளாதார நிபுணர்களின் மன்றமா.

கொரோனோவை கட்டப்படுத்தவோ பொருளாதார முன்னேற்றத்திற்காகவோ அல்லாமல் வெறுமனே பாராளுமன்றத்தில் தங்களுடைய வாய்ச்சவால்களைக் காட்டத் தான் கேட்கின்றனர். ஆனால் வாய் சவால்களைக் காட்ட இதுவல்ல நேரம்.

இன்று மக்கள் படும் கஸ்ரங்களில் எதிர்க்கட்சிகள் எத்தகைய பங்களிப்பை செய்வது வருகின்றனர் என்று பாருங்கள். அவ்வாறு மக்களுக்கு எதனையாவது செய்வதை விடுத்த பாராளுமன்றத்தை கூட்டு கூட்டு என்று தான் கேட்கின்றனர். அவ்வாறு அவர்கள் கேட்பது தங்கள் தங்கள் அரசியலுக்காகவே தான் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post