யாழிற்கு திருட்டுத்தனமாக வர வேண்டாம் - மறைந்திருந்தால் அறிவிக்க கோருகிறார் அரச அதிபர் - Yarl Voice யாழிற்கு திருட்டுத்தனமாக வர வேண்டாம் - மறைந்திருந்தால் அறிவிக்க கோருகிறார் அரச அதிபர் - Yarl Voice

யாழிற்கு திருட்டுத்தனமாக வர வேண்டாம் - மறைந்திருந்தால் அறிவிக்க கோருகிறார் அரச அதிபர்

கொரோனோ அபாயம் நிலவுகின்ற நிலைமையில் வெளி மாவட்டங்களில் இருந்து எவரேனும் திருட்டு தனமாக யாழ்ப்பாணத்திற்கு வந்து தலைமறைவாக இருந்தால் உடனடியாக தங்களை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கேட்டுள்ளார்.

இலங்கையில் சில பிரதேசங்கள் தொடர்ந்தும் கொரோனோ அபாய வலயங்களாக இருக்கின்றன. இந்த நிலைமையில் தொடர்ந்தும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டும் சில இடங்களில் தளர்த்தப்பட்டும் இருக்கின்றது. இதில் குறிப்பாக யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் நீண்டநாள் ஊரடங்கின் பின்னர் தற்போது தான் தளர்த்தப்பட்டும் இருக்கின்றது.

இவ்வாறான நிலைமையில் கொரோனோ அபாய வலயமான கொழும்பிலிருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வருகின்ற லொறிகளில் பலரும் திருட்டுத்தனமாக யாழிற்கு வந்திருக்கின்றனர். அவ்வாறு வந்தவர்களில் 7 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு எவரும் வரலாம் போகலாம். ஆனால் அதற்கான நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டியது என்பது மிக மிக அவசியமானது. அதிலும் சுகாதாரப் பிரிவினதும் பாதுகாப்புத் துறையினதும் அறிவுறுத்தல்கள் கட்டாயம் கடைப்படிக்கப்பட வேண்டும்.

ஆயினுமு; அதனை எல்லாம் விடுத்து திருட்டுத்தனமான செயற்பாடுகளில் எவரும் ஈடுபடக் கூடாது. அவ்வாறு சுகாதார பிரிவின் அறிவுறுது;தல்களை மீறி யாரும் யாழ்ப்பாணத்திற்கு வருவது ஏற்றுக் கொள்ளத்தக்கல்ல. இவ்வாறான வருகைகள் என்பது இங்குள்ள மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைகின்றன.

ஆகவே இன்றைக்கு இருக்கின்ற கொரோனோ அபாய வலயங்களிலிருந்தோ அல்லது வேறு மாவட்டங்களிலிருந்தோ யாழ்ப்பாணத்திற்கு திருட்டுத்தனமாக எவரேனும் வந்திருந்தால் அவர்கள் உடனடியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே நேரம் எவரேனும் அவ்வாறு வந்து மறைந்திருந்தால் அவர்களை குடும்பத்தினர் அயலவர்கள் கிராம மக்கள் என அனைவரும் இணங்காட்ட வேண்டும். இதனை சமூகப் பொறுப்பாக கருதி செயற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றவர்களை சுகாதாரப் பரிவின் அறிவுறுத்தல்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த வேண்டும். அதனூடாகவே மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற அச்சத்தை போக்குவதுடன் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளையும் சீர் செய்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post