யாழில் ஒரு சிலரின் கருத்துக்கள் மன வேதனையை ஏற்படுத்துகிறது. - அரச அதிபர் கவலை - Yarl Voice யாழில் ஒரு சிலரின் கருத்துக்கள் மன வேதனையை ஏற்படுத்துகிறது. - அரச அதிபர் கவலை - Yarl Voice

யாழில் ஒரு சிலரின் கருத்துக்கள் மன வேதனையை ஏற்படுத்துகிறது. - அரச அதிபர் கவலை

யாழ்.மாவட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை அரசியல்வாதி ஒருவாிடம் வழங்குமாறு நான் கூறியதாக தோ்தல் ஆ ணைக்குழு உறுப்பினா் கூறிய கருத்து தொடா்பாக சுயாதீன விசாரணைக்கு தயாா். என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட செ யலா் கணபதிப்பிள்ளை மகேஸன் குறித்த விடயம் தொடா்பாக விசாரணை நடாத்துமாறு தோ்தல் ஆணைக்குழுவிடம் தா ம் ஏற்கனவே கோாிக்கை விடுத்திருப்பதாகவும் கூறியுள்ளாா்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் மேற்படி தோ்தல் ஆணைக்குழு உறுப் பினாின் கருத்து தொடா்பாக ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில்..

 நிவாரண நடவடிக்கைகளுக்காக யாழ்.மாவட்ட செயலக ம் பொறிமுறை ஒன்றை தயாாித்து வைத்திருக்கின்றது.  அந்த பொறிமுறையின் ஊடாகவே நிவாரணம் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

மேலும் நிவாரணம் பெறுபவா்களும் த குதி அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனா். மேலும் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் நிவாரண பணிகள் செ ய்யப்படுகின்றது.

மேலும் மாவட்ட செயலகத்திடம் நேரடியாக மக்கள் கோாிக்கை முன்வைக்கின்றனா். குறிப்பாக 542 போ் எங்களிடம் கோாிக்கை முன்வைக்கின்றனா். அவா்கள் தொடா்பாக அறிந்து

அவா்களிடம் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கு மேலதிகமாக சம்மந்தப்படாத எவாிடமும் பொருட்களை வழங்குமாறு நான் உத்தரவு வழங்கவில்லை. குறித்த கருத்தை கூறிய நபா் தான் கூறும் கருத்து சாியானதா என்பதை பாிசீலி த்திருக்கவேண்டும்.

மேலும் பாிசீலித்து உண்மை இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். என கூறியிருந்தாா். இதற்போது சுயாதீன விசாரணை ஒன்று நடாத்தப்பட்டால் அதற்கு நீங்கள் தயாரா?என ஊடகவியலாளா் ஒருவா் கேள்வி எழுப்பியிருந்தாா்.

அதற்கு பதிலளித்த அரசாங்க அதிபா் ஆம். நான் சுயாதீன விசார ணைக்கு தயாா் என பதிலளித்துள்ளதுடன் தோ்தல் ஆணைக்குழு உறுப்பினா் கூறிய கருத்து தொடா்பாக விசாரணை நடாத்துமாறு தான் ஏற்கனவே தோ்தல் ஆணைக்குழுவின் தலைவாிடம் கோாிக்கை முன்வைத்திருக்கிறேன்.

மேலும் மாவட் ட செயலகத்தினதும் மாவட்ட செயலாினதும் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துகூறும் போது மிக அவதானமாக அதனை கூறவேண்டும்.

நான் ஒரு அரச நிா்வாகி. நான் அரசியல்வாதி அல்ல. நாங்கள் மக்களுக்காக மிக அா்ப்பணிப்புடன் சேவையாற்றும் நிலையில் இவ்வாறான ஒருசிலருடைய கருத்துக்கள் மிகுந்த கவலையளிக்கின்றது. என அவா் மேலும் கூறியுள்ளாா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post