ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறாராம் ரட்ணஐீவன் ஹூல் - அரச தரப்பு குற்றச்சாட்டு - Yarl Voice ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறாராம் ரட்ணஐீவன் ஹூல் - அரச தரப்பு குற்றச்சாட்டு - Yarl Voice

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறாராம் ரட்ணஐீவன் ஹூல் - அரச தரப்பு குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தேவையான அரசியல் நிகழ்ச்சி நிரலை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ரட்ணஐீவன் ஹூல் மேற்கொண்டு வருவதாக அரச தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு அரசியல் நடாத்துவதாக அரச தரப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிடும் போதே அரசின் முக்கிய பிரதிநிதிகளில் க்கியஸ்தரான மகிந்தானந்தே அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதார்.

இவ்விடயம் குறித்து கொழும்பு ஊடுகமொன்றுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

தேர்தல் ஆணைக்குழுவில் ஹூல் என ஒரு உறுப்பினர் இருக்கின்றார். அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசியல் வேலைகளையே செய்து வருகின்றார்.

ஆனால் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றார். ஆனால் இவர் ஹூல் ஐக்கிய தேசியக் கட்சிக்கான அரசியலை செய்கின்றார்.

தேர்தல் ஆணைக்குழுவானது சுயாதினமாகச் செயற்பட வேண்டும். மக்கள் பக்கம் நின்று அரசமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post