வடக்கு மாகாண ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் செயலாளர் - Yarl Voice வடக்கு மாகாண ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் செயலாளர் - Yarl Voice

வடக்கு மாகாண ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் செயலாளர்வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட ஆசிரியர்கள் பெற்ற தற்காலிக இணைப்புக்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேலும் இரண்டு மாதங்களிற்கு நீடிக்கப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செய்லாளர் இ.இளங்கோவன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வன்னிப் பகுதியில் பணியாற்றிய நிலையில் பல்வேறு காரணங்களிற்காக தற்காலிக இணைப்பை பெற்ற நிலையில் இணைப்புக் காலம் முடிவடைந்தவர்கள் விடுமுறை பெற்றவர்களின் நிலமை தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் மேலும் விபரம்  தெரிவிக்கையில்

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட ஆசிரியர்கள் பலர் தற்காலிகமாக பிரசவ காலம் இ மருத்துவம் உள்ளிட்ட பல தேவைகளிற்காக பிற  மாவட்டத்திற்கு  இணைப்பு பெற்று பணியாற்றிய நிலையில் அக் கால எல்லை முடிவடையும் பட்சத்தில் மேலும் இரு மாதங்கள்  அனைத்து ஆசிரியர்கள் உத்தியோகத்தர்களிற்கும்   நீடிக்கப்படுகின்றது. இதனால் தற்போது பணியாற்றிய பாடசாலைகளிலேயே ஒப்பமிட முடியும்.

இதேநேரம் சம்பளம் அற்ற விடுமுறைகளை பெற்று வெளிநாடுகளிற்கு சென்றவர்கள் பணிக்கு திரும்ப முடியாத நிலையில் பதற்றமடையத் தேவையில்லை. அவர்களிற்கும் மேலும் இரு மாதங்கள் சம்பளம் அற்ற விடுமுறையாக அனுமதிக்கப்படும். என்றார்.-

0/Post a Comment/Comments

Previous Post Next Post