இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
ஊரெழு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக கோப்பாய் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நேற்றைய தினம் மாலை 25 லிட்டர் கசிப்பு கைப்பற்றியதுடன் சந்தேகத்தில் ஊரெமு பொங்கனை கிராமத்தைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
--
Post a Comment