கொரோனோவிலிருந்து பூரண குணமடைந்த யாழ் வாசிகள் இருவர் நாளை வீடுகளுக்கு வருகை - பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice கொரோனோவிலிருந்து பூரண குணமடைந்த யாழ் வாசிகள் இருவர் நாளை வீடுகளுக்கு வருகை - பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice

கொரோனோவிலிருந்து பூரண குணமடைந்த யாழ் வாசிகள் இருவர் நாளை வீடுகளுக்கு வருகை - பணிப்பாளர் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் தற்போது குணமடைந்த நிலையில் நாளை அவர்களது வீடுகளுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் தொற்று காணரமாக யாழ்ப்பாணத்தில் 17 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் தொற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்துவரப்பட இருப்பதாக பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

 அதே நேரத்தில் சிகிச்சையில் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்கின்ற குறித்த இருவரும் தொடர்ந்தும் 13 நாட்கள் அவர்களது வீடுகளிலேயே இருப்பார்கள் என்றும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post