இன மத மொழி பேதங்களை மறந்து மனித நேயத்துடன் அனைவரும் செயற்பட வேண்டும் - ஆறுதிருமுருகன் வலியுத்து - Yarl Voice இன மத மொழி பேதங்களை மறந்து மனித நேயத்துடன் அனைவரும் செயற்பட வேண்டும் - ஆறுதிருமுருகன் வலியுத்து - Yarl Voice

இன மத மொழி பேதங்களை மறந்து மனித நேயத்துடன் அனைவரும் செயற்பட வேண்டும் - ஆறுதிருமுருகன் வலியுத்து

கொரோனாவின் கொடூரப்பிடியில் உள்ள நாட்டு மக்கள் அனைவரும் இன மத மொழி பேதங்களை மறந்து மனித நேயத்துடன் செயற்பட வேண்டிய முக்கிய காலகட்டம் இது என்று கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

எமது தலைமுறையை பாதுகாக்க சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ் மக்களாகிய நாம் மொழி ரீதியாகவும் இன ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம். தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் மனித நேயத்துடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் நோயானது மிகவும் கொடூரமான நோய் என்று மருத்துவத் துறையினர் கூறப்படுகின்றது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

நாம் கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தாலும் இப்போது மனிதநேயத்துடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

 ஏராளமான கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் கொண்ட எமது சமூகம் இன்று பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றது.

தலைமுறையை பாதுகாக்க நாம் சுகாதாரத்துடன் இருந்து இந்த வைரஸ் நோயிலிருந்து பாதுகாப்பைப் பெற வேண்டும் என்றார். --

0/Post a Comment/Comments

Previous Post Next Post