அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை - Yarl Voice அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை - Yarl Voice

அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை

யாழ்ப்பாண நகரில்  தேசிய அடையாள அட்டடையின் இறுதி இலக்க நடைமுறையினை பின்பற்றாதவர்கள் மீது பொலிஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாண நகரில் அடையாள அட்டையின் இறுதியிலக்க நடைமுறையில்இ பொதுமக்கள் வெளியில் நடமாடுவது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் இறுக்கமான நடவடிக்களை எடுத்துவருகின்றனர்.

ஊடரங்குச்சட்ட நேரம்  திங்கள் தொடக்கம் வெள்ளி வரை யார் யார் வெளியிலே பயணிக்கலாம் என அண்மையில்இ அரசாங்கத்தினால்
அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில் திங்கட் கிழமை வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவோர் இலக்கம் 1 அல்லது 2 என்ற இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக கொண்டுள்ளவர்கள் ஆவர்.

அத்தோடுஇ செவ்வாய்க்கிழமை அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3 அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.

புதன்கிழமைகளில் அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் வெளியே செல்ல முடியும்.

வியாழக்கிழமை அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்.

வெள்ளிக்கிழமைகளில் அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் வெளியே செல்ல முடியும்
என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இவ் அடையாள அட்டை இலக்க முறை யாழ்ப்பாண நகரில் பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதுடன் வியாழக்கிழமையான இன்றைய தினம் அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் மாத்திரம் வெளியே நடமாட அனுமதி வழங்கப்படுகின்றது.

அடையாள அட்டை நடைமுறையினை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன
அண்மையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post