வடக்கில் கொரோனோ தொற்று மேலும் பரவக் கூடிய அபாயம் - மருத்துவ சங்கம் எச்சரிக்கை - Yarl Voice வடக்கில் கொரோனோ தொற்று மேலும் பரவக் கூடிய அபாயம் - மருத்துவ சங்கம் எச்சரிக்கை - Yarl Voice

வடக்கில் கொரோனோ தொற்று மேலும் பரவக் கூடிய அபாயம் - மருத்துவ சங்கம் எச்சரிக்கை

கொரோனோ வைரஸ் தொற்று இந்த மாதத்திற்கும் மேலும் பரவக் கூடிய அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி காண்டிபன் அதனைக் கட்டப்படுத்துவதற்கான போதிய வசதிகள் இல்லாததால் அனைத்து தரப்பினர்களும் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்திலில் இருக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டமானது கொரோனோ தொற்று நோய்க்கு ஒரு ஆபத்தான இடமாக கணிக்கப்பட்டிருந்த போதும் தற்போது மன்னார் மாவட்டத்திலும் தாராபுரம் என்கின்ற பகுதியில் இன்று ஒரு தொற்று நோயாளி இணங்கானப்பட்டுள்ளார்.

முக்கியமாக இந்த தொற்று நோயாளியானவர் மன்னாரில் நடைபெற்ற மரண வீடொன்றிற்கு வந்திருந்ததாகவும் அவர் கடந்த மாதம் இந்தோனேசியாவில் இரந்த வந்த 18 ஆம் திகதி நடைபெற்ற மரணச் சடங்கில் கலந்த கொண்டு பின்னர் புத்தளம் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த மரணச் சடங்கில் நிறைந்த குடும்பங்கள் பங்கேற்றிருந்தார்கள். சுமார் 500 பேரிற்கும் மேற்பட்டவர்கள் அதில் கலந்த கொண்டிருக்கின்றனர். ஆகையினால் மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பணிப்பாளர் 500 இற்கும்; மேற்பட்ட குடும்பங்களை தனிமைப்படுத்தியிருக்கின்றார்.

ஆயினும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவiயில்லை என்றும் அத்தியாவசிய தேவைகளை மாவட்ட மற்றும் பிரதேச செயலர் ஊடாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்தள்ளார்.

இவ்வளவு காலமும் யாழ்ப்பாண மாவட்டம் மட்டுமே வட மாகாணத்தில் கொரோனோ தொற்றுக்கான பிரதேசமாக இருந்த போதும் தற்போது மன்னார் மவாட்டமும் அதில் இனைந்துள்ளது. ஆகையினால் மக்கள் இதனையிட்டு பெரிதும் பீதியடையாமல் இருக்க வேண்டும். ஆயினும் இந்த நோயாது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல ஏனைய இடங்களிலும் பரவலாம் என்ற நிலையில் மிக அவதானமாக அனைவரும் பொறுப்பொட செயற்பட வேண்டும்.

முக்கியமாக ஒரு நோயாளி இணங்காணப்படுகின்ற போது அந்த நோயாளி சென்றிருக்ககூடிய இடங்கள் எல்லாம் நாங்கள் தனிமைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. ஆகவே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் மக்கள் முக்கியமாக அவதானமாக செயற்பட வேண்டும். தேவையில்லாமல் வீதிகளில் நடாடுவதைத் தவிரத்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக நாங்கள் பார்க்கின்ற போது இந்த ஊரடங்குச் சட்டத்தின் பாஸ் நடைமுறையை கூட தவறாக பயன்படுத்தகின்றார்கள். ஆகவே சரியாகப் பயன்படுத்த வேண்டும். நூறுக்கு மேற்பட்டவர்கள் சான்றிதழ்களைப் பெற வைத்திய அதிகாரியிடம் செல்கின்றார்கள்.

அதே நேரம் கடமை நிமித்தம் ஒரு மாவட்டத்திலிருந்த அடுத்த மாவட்டம் செல்கின்றார்கள். அவ்வாறு செல்வதற்கும் சுகாதார வைத்திய அதிகாரியின் சான்றிதழ் வழங்கப்பட் வேண்டிய தேவையுள்ளது. முக்கியமாக அத்தியாவசிய சேவையிலுளளவர்கள் பிரதேச செயலகங்கள் வங்கிகளில் வேலை செய்வர்களுக்கு பாஸ் வழங்கப்படுகிறது.

ஆயினும் அவர்கள் உண்மையில் அந்த பாஸ் அனுமதியை உண்மையாகவே அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். வேறு தேவைக்கும் பயன்படுத்தவதால் நோயைப் பரப்புகின்ற காவிகளாக செயற்படும் சந்தர்ப்பமும் உள்ளது. இந்த கோரோனோ தொற்று நோயானது மிக வேகமாக பரவக் கூடிய ஒரு தொற்று நோயாகவே உள்ளது. இது ஒரு நோளியிடமிருந்து இன்னொரு நோயாளியிடமிருந்து அறிகுறிகள் இல்லாமலே தொற்றுவதற்கு சந்தரப்பம் உ;ளது.

நூறு பேரில் 70 பேருக்கு தான் நோய் அடையாளம் அறிகுறி தெரீயும் மிகுதி 30 பேருக்கு எதிர்மறையாக வரும். ஆதனால் அவர்கள் சூழலில் நடமாடத் தொடங்குவார்கள். ஆகையினால் அந்த 30 வீதமானவர்கள் நோயைப் பரப்பலாம். அது மட்டுமன்றி 20 வீதமான ஆட்கள் அறிகுறிகளைக் காட்ட மாட்டார்கள். 20 அறிகுறி தென்படும்.

ஆகையனால் நோயைப் பரப்பி விடுவார்கள். இந்த நோயாளனது எவ்வளவு துர்ரம் தனிமைப்படுத்தல் அல்லது வீடுகளில் கட்டுப்பாட்டுடன் இருபக்கிறீர்களளோ அவ்வளவு தூரத்திற்கு தொற்று ஏற்படாமல் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்

அதே நேரம் இந்த நோயைக் கட்டப்படுத்துவதற்கு ஆளணி வசதியோ கட்டமைப்பு வசதியோ எதுவும் முழுமையாகக் கிடையாது. ஆகையினால் இந்தவருடம் ஏப்ரல் முடிவடைகின்ற போது 2000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் வராமல் பாதுகாப்பதற்கு மக்களது புரண ஒத்துழைப்பை கேட்டுக் கொள்கிறோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post