இன்றைய ஊரடங்கு நடைமுறை குறித்து பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு - Yarl Voice இன்றைய ஊரடங்கு நடைமுறை குறித்து பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு - Yarl Voice

இன்றைய ஊரடங்கு நடைமுறை குறித்து பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

குறிப்பாக அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடகளில் இருந்து வெளியேறுவோர் தமது தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு வெளியேறலாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனோ தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் முப்படையினரும் முகாம்களுக்கு உடனடியாகச் செல்ல வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அவர்கள் செல்லவதற்காக இன்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகையினால் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்ததன் அடிப்படையில் தமது அடையாள அட்டையினைப் பயன்படுத்தி அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 1 அல்லது 2 என்ற எண்களை கொண்டவர்களும் செவ்வாய்கிழமைகளில் 3 அல்லது 4 என்ற எண்களை கொண்டவர்களும் புதன் கிழமையில் 5 அல்லது 6 என்ற எண்களையும் வியாழக்கிழமையில் 7 அல்லது 8 என்ற எண்களை கொண்டவர்களும் வெள்ளிக்கிழமையில் 9 அல்லது 0 என்ற எண்கள் அடிப்படையிலும் வெளியேறவேண்டும்.

இந்த நடைமுறை நாளைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில் அரச மற்றும் தனியார்துறையில் தொழில்புரிபவர்கள் நாளாந்த வேதனத்தின் அடிப்படையில் தொழில் புரிபவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு இந்த நடைமுறை தாக்கம் செலுத்தாது.

குறித்த மாவட்டங்களில் உணவு உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்யவுள்ள பொதுமக்கள் இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என
 பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளா

0/Post a Comment/Comments

Previous Post Next Post