பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளப் போகும் உலகம் - சர்வதேச நாணயநிதியம் எச்சரிக்கை - Yarl Voice பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளப் போகும் உலகம் - சர்வதேச நாணயநிதியம் எச்சரிக்கை - Yarl Voice

பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளப் போகும் உலகம் - சர்வதேச நாணயநிதியம் எச்சரிக்கை

கொரோன வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

1930களில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மந்தநிலைக்கு பிறகு உலக பொருளாதாரம் இப்போதுதான் இவ்வளவு கடுமையான நெருக்கடியை சந்திக்கப் போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டில் கூட இதிலிருந்து பாதி அளவே மீள முடியும் என்று அவர் கணித்துள்ளார்.

பல உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளதால் நிறுவனங்கள் மூடப்பட்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக நிறுவனங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மூடப்பட்டதால் 330 கோடி மக்கள் வேலையிழந்துள்ளார்கள் என ஐ.நாவின் ஆய்வு தெரிவிக்கிறது.

சர்வதேச நிதி ஆணையம் மற்றும் உலக வங்கியின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையிலேயே உலகப் பொருளாதாரம் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீடு குறித்து கிரிஸ்டலினா குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்து வரும் நாடுகள் இதனால் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர் அந்நாடுகளுக்கு பில்லியன் கணக்கிலான டொலர்கள் மதிப்புள்ள வெளிநாட்டு நிதி அந்த நாடுகளுக்குத் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post