முன்னாள் அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice முன்னாள் அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice

முன்னாள் அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் எமது அரசாங்க காலத்தில் நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய சம்பளங்களை வழங்க வேண்டும்.

அத்துடன் செயற்றிட்ட உதவியாளர்களுக்கான நியமனத்தை உறுதிசெய்து அவர்களுக்கும் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்று முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடு முடக்கப்பட்டுள்ளது தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய இந்தப் பட்டதாரிகளுக்கான நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.

இதேபோன்றே எமது ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றனர். தற்போதைய இக்கட்டான நிலையிலும் அவர்கள் கடமையாற்றுகின்றனர்.

ஆனால் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று முறையிடப்படுகின்றது. எனவே இந்தக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதேபோன்றே எமது ஆட்சிக் காலத்தில் செயற்றிட்ட உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது. அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்று எழுத்துமூலப் பரீட்சைஇ நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு சட்டபூர்வமாக இந்த நியமனம் வழங்கப்பட்டது.

ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் அந்த 7500 பேருக்கான நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய இக்கட்டான நிலையில் இவர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

எனவே இந்த நியமனங்கள் உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தாக்கத்திலிருந்து விடுபட மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட நியமனதாரர்களின் வாழ்வில் விடிவை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்

0/Post a Comment/Comments

Previous Post Next Post