வடக்கு பாடசாலைகளை வழங்குமாறு பொலிஸாரும் கோரிக்கை - கல்விச் சமூகம் எதிர்ப்பு - Yarl Voice வடக்கு பாடசாலைகளை வழங்குமாறு பொலிஸாரும் கோரிக்கை - கல்விச் சமூகம் எதிர்ப்பு - Yarl Voice

வடக்கு பாடசாலைகளை வழங்குமாறு பொலிஸாரும் கோரிக்கை - கல்விச் சமூகம் எதிர்ப்பு

பொலிஸ் நிலையங்களைத்தேடி அதிக மக்கள் வருகை தருவதனால் பொலிசாருக்கு கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் பொலிஸ் நிலையங்களை இயக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே படையினர் பாடசாலைகளை கோரிவரும் நிலையில் பொலிசாரும் தற்போது பாடசாலைகளைக் கோரி வருகின்றனர்.

இந்த வகையில் பொலிஸ் நிலையங்களிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் மக்கள் தொடர்பாடல்களை ஏற்படுத்தி அங்கே மக்களிற்கான பணிகளையாற்றும் சமயம் பொலிஸ் நிலையங்களை பாதுகாக்க முடியும் எனப் பொலிசார் கருதுகின்றனர்.

இதற்காக யாழ்ப்பாணம் மாவண்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியும் கிளிநொச்சியிலும் முதல்கட்டமாக கோரியுள்ளபோதிலும் அவற்றினை வழங்க பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பதனால் பொலிசாரிற்கு இதுவரை பாடசாலைகள் வழங்காத போதிலும் இது தொடர்பான அழுத்தங்கள் தொடர்வதாக கல்விச் சமூகம் சுட்டிக்காட்டுகின்றது.

இதேநேரம் விடுமுறையில் சென்ற படையினரை தங்க வைப்பதற்காக ஏற்கனவே படையினர் அதிக பாடசாலைகளை கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.-

0/Post a Comment/Comments

Previous Post Next Post