சீனாவில் மிக விரைவில் கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட ஆட்டம் ஆரம்பிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் சீனாவில் 108 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 98 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் என்பதோடு 10 பேர் சீனாவின் ஹய்லாஞ்ஜியன் மற்றும் குவண்டோங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஆரம்பித்த வுஹான் நகரில் இதுவரை எந்தவொரு நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில் சீனாவுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் சவாலாக அமைய சந்தர்ப்பங்கள் பல இருப்பதாக அந்நாட்டு மருத்துவத்துறையினர் எச்சரித்திருக்கின்றனர்.
சீனாவை மீண்டும் தாக்கும் கொரோனோ வைரஸ்
Published byYarl Voice Editor
-
0
Tags
world
Published by:-Yarl Voice Editor
Yarl Voice Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil.

Post a Comment