யாழில் நிர்ணய விலையிலும் அதிக விலையில் அரிசி விற்பனை - உயர் மட்ட கூட்டத்தில் ஆராய்வு - Yarl Voice யாழில் நிர்ணய விலையிலும் அதிக விலையில் அரிசி விற்பனை - உயர் மட்ட கூட்டத்தில் ஆராய்வு - Yarl Voice

யாழில் நிர்ணய விலையிலும் அதிக விலையில் அரிசி விற்பனை - உயர் மட்ட கூட்டத்தில் ஆராய்வு

தேசிய அளவில் அாிசிக்கான விலை நிா்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நிா்ணயம் செய்யப்பட்ட அாிசிவகைகளுக்குள் உள்ளடக்கப்படாத மொட்டைக்கருப்பன் ஆட்டக்காாி அாிசி வகைகள் யாழ்.மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுப்பது தொடா்பாக மாவட்ட செயலா் தலமையில் ஆராயப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலா் க.மகேஷன் தலமையில் அாிசி ஆலை உாிமையாளா்கள் வா்த்தகா்களுடன்  குறித்த கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது. கலந்துரையாடல் தொடா்பாக மாவட்ட செயலா் ஊடகங்களுக்கு கருத்து கூ றும்போது மேலும் கூறுகையில்..

 தேசிய அளவில் அாிசி வகைகளுக்கு விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும் யாழ்.மாவட்டத்தில் 90 தொடக்கம் 95 வீதமான மக்களால் நுகரப்படும் மொட்டைக்கருப்பன் ஆட்டக்காாி போன்ற அாிசி வகைகளுக்கு நிா்ணம் செய்யப்படவில்லை.

 இதனால் யாழ்.மாவட்டத்தில் மொட்டைக்கருப்பன் ஆட்டக்காாி போன் ற அாிசி வகைகள் யாழ்.மாவட்டத்தில் 140 ரூபாய் தொடக்கம் 145 ரூபாய்வரை விற்கப்படுவதாக பொதுமக்கள் முறைப்பாடு தொிவிக்கின்றனா்.

எனவே குறித்த இருவகை அாிசிக்கும் மாவட்டரீதியாக விலையை நிா்ணய ம் செய்வதற்காகவே அாிசி ஆலை உாிமையாளா்கள் வா்த்தகா்களுடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.

இதன்போது சாதாரண நிலமையிலும் குறித்த இருவகை அாிசிகளும் மற்றய அாிசிவகைகளை காட்டிலும் 10 ரூபாய் தொடக்கம் 20 ரூபாய் அதிகமாகவே விற்பனை செய்யப்படுகின்றது.

அதனையும் கருத்தில் கொண்டதுடன் தேசிய அளவில் அாிசிகளுக்கான நிா்ணய விலைகளை மிஞ்சாத வகையில் மேற்படி இரு நெல்வகைகளிலும் குத்தாிசி 125 ரூ பாயாகவும் உடையல் 110 ரூபாயகவும் தீட்டல் 115 ரூபாயாகவும் சிபாா்சு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிபாா்சு பாவனையாளா் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவா்கள் தங்களுடைய சட்டத்தின் பிரகாரம் அங்கீகாித்தால் மாவட்டத்தில் குறித்த அாிசிக்கான விலை நிா்ணயம் செய்யப்படும். ஆக குறைந்தது ஒரு மாதத்திற்காவது இந்த சிபாா்சை நிா்ணயம் செய்யுமாறும் பாவனையாளா் பாதுகாப்பு அதிகாரசபையிடம்
கேட்டிருக்கின்றோம்.

மேலும் நெல் மூடை 5000  தொடக்கம் 5100 ரூபாயை தாண்டிக் கொண்டிருக்கும் நிலையில் 3700 ரூபாவுக்குள் அதன் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என அாிசி ஆலை உாிமையாளா்கள் கேட்டுள்ளதுடன்இ அவ்வாறு கட்டுப்படுத்தினாலே அாிசிக்கான விலை நிா்ணயத்தை பேண முடியும் எனவும் கேட்டுள்ளனா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post