கொரோனோவால் தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை் - Yarl Voice கொரோனோவால் தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை் - Yarl Voice

கொரோனோவால் தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை்

கொரோனோ தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற போது அதனை மீறுகின்றவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய சட்ட  நடவடிக்கை எடுக்குமென்று தெரிவிக்கப்படுள்ளது.

இதற்கமைய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை மீறுகின்றவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களுக்கு 6 மாத காலம் சிறைத் தண்டணை வழங்கப்படுவதுடன் தண்டப்பணமும் அறவிடப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகை உலுக்கி வரகின்ற கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 36115 பேர் இதுவரையில் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது.

ஆகவே ஊரடங்குச் சட்டத்தை மீறுகின்றவர்கள் கைது செய்யப்படுகின்ற அதே வேளையில் தனிமைப்படுத்தலை மீறுகின்றவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஐித் ரோகன இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.0/Post a Comment/Comments

Previous Post Next Post