தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் இருந்து யாராவது வந்தால் சுகாதாரப் பிரிவிற்கு அறிவியுங்கள் - வடக்கு சுகாதார பணிப்பாளர் கோரிக்கை - Yarl Voice தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் இருந்து யாராவது வந்தால் சுகாதாரப் பிரிவிற்கு அறிவியுங்கள் - வடக்கு சுகாதார பணிப்பாளர் கோரிக்கை - Yarl Voice

தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் இருந்து யாராவது வந்தால் சுகாதாரப் பிரிவிற்கு அறிவியுங்கள் - வடக்கு சுகாதார பணிப்பாளர் கோரிக்கை

தனிமைப்படுத்தப்பட்டபிரதேசங்களில் இருந்து எமது மாகாணங்களுக்குள் யாராவது பிரவேசித்திருந்தால் அவர்கள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இல்லது விட்டால் மாகாண சுகாதார பணிமனை அவசர இலக்கமான 021 222 6666 என்ற இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழலில் பாரவூர்தியில் தனிப்படுத்தப்பட்ட பிரதேசங்களில்இருந்து 7 பேர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.

அவர்களுடன் பாரவூர்த்திச் சாரதியும் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான கொரோனா தொற்றுக்குரிய பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறான வேறு மாகாணங்களில் இருந்து குறிப்பாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்கிளல் இருந்து முன் அனுமதி பெறாது எமது பிரதேசத்திற்கு வருகை தந்தால் சுகாதார வைத்திய அதிகாரிக்கு அல்லது பொதுச்சுகாதாரப் பரிசோதகருக்கு அல்லது கிராம அலுவலருக்கு அறிவிக்கவேண்டும் .

அவ்வாறு அறிவித்தல் வழங்கும்போதுதான் அவர்களையும் அவர்களிடம் இருந்து ஏனையவர்களையும் பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாடுபட்டுள்ளார்கள்.

இத்தகயை சம்பவங்கள் அனைத்துவிடையங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே இனிமேல் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாது இருக்க யாராவது வருகை தந்திருந்தால் உடனடியாக துறைசார்ந்தவர்களுக்கு அறிவிக்குமாறு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post