முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெறும் - Yarl Voice முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெறும் - Yarl Voice

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெறும்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18..05.2020 அன்று நடைபெறும். 

கொவிட் 19(உழஎனை 19 )பரவல் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டுநடைமுறைகள் சட்டங்கள் என்பவற்றிற்கு மதிப்பளித்து அவற்றைக் கடைப்பிடித்தபடி இந்நினைவேந்தல் அனுஸ்ரிக்கப்படும்.     

உள்ளூர் வளங்களை ஒன்றுதிரட்டிப் பயன்படுத்துவதன்மூலம் இந் நினைவேந்தல் எளிமையாகவும் உரியமுறைப்படியும் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு நிதி திரட்டல் நடவடிக்கைகள் எதிலும்  ஈடுபடாது.      

இந்நினைவேந்தல் நடவடிக்ககைகள் தொடர்பில் அனைத்துப் பொதுஅமைப்புக்கள் இபொதுமக்கள் அனைவரையும் இந் நினைவேந்தலுக்காய் எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதுடன் நினைவேந்தல் தொடர்பான நிகழ்சி ஒழுங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

தகவல் :- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு. தொடர்புகளுக்கு  

  1.தென்கையிலை ஆதினம்  திருகோணமலை      775098157                                         

  2. அருட்பணி லியோ ஆம்ஸ்ரோங்      077 618 1008

0/Post a Comment/Comments

Previous Post Next Post