யாழிலுள்ள மக்களுக்கு 701 வீடுகளை இரானுவம் அமைத்துக் கொடுத்துள்ளது - இரானுவத் தளபதி - Yarl Voice யாழிலுள்ள மக்களுக்கு 701 வீடுகளை இரானுவம் அமைத்துக் கொடுத்துள்ளது - இரானுவத் தளபதி - Yarl Voice

யாழிலுள்ள மக்களுக்கு 701 வீடுகளை இரானுவம் அமைத்துக் கொடுத்துள்ளது - இரானுவத் தளபதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் சொந்த வீடுகளின்றி வசித்து வருகின்ற குடும்பங்களுக்கு இரானுவத்தினால் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட இரானுவத் தளபதி மேஐர் ஐனரல் ரூவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழில் வீடில்லாமல் வசித்து வந்த குடும்மொன்று இரர்னுவத்தால் அமைக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

யாழ் மாவட்டத்தில் சொந்த வீடுகள் இல்லாமல் பல பேர் தற்போதும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான வீடுகளை இரர்னுவம் அமைத்துக் கொடுத்து வருகின்றது.

இதற்கமைய வறிய குடும்பத்தைச் சேர்ந்த 701 குடும்பங்களுக்கு இதவரையில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று தொடர்ந்தும் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு துரித கதியில் அமைக்கப்பட்டு வருகின்ற வீட்டுத் திட்டப் பணிகள் மிக விரைவில் முடிவுறுத்தப்பட்டு அந்த வீடுகளையும் மக்களிடம் கையளிக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post