கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் யாழ் வாசிகள் 8 பேரும் உடல் நலம் தேறிவருகின்றதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இவ்வாறு உடல் நலம் தேறிய நிலையில் ஏற்கனவே 9 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இந்த 8 பேரும் மிக விரையில் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு ஆனப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இதுவரையில் இப்பகுதியில் இருந்து அண்மைக்காலங்களில் 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் சிகிச்சைக்காக நாட்டில் உள்ள 4 சிறப்பு வைத்திய சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களின் 9 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து முழுமையாக குணமடநை;த நிலையில் மீண்டும் இங்கு கொண்டுவரப்பட்டு தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொடர்ந்து 8 பேரின் உடல் நிலைகளும் தேறிவருகின்றது. அவர்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து முழுமையான குணமடைந்து மிக விரைவில் தத்தமது வீடுகளுக்கு வருவார்கள் என்றார்.
Post a Comment