ஐயாயிரம் ரூபா கொடுப்பனவிற்கு அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது - யாழ் அரச அதிபர் - Yarl Voice ஐயாயிரம் ரூபா கொடுப்பனவிற்கு அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது - யாழ் அரச அதிபர் - Yarl Voice

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவிற்கு அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது - யாழ் அரச அதிபர்

பேரிடர் காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை அரசியல் வாதிகள் எவரும் உரிமை கோர முடியாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடரினால் சமூக நன்மை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு இந்தக் 5000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

 இதனை எந்தவொரு அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல் வாதிகள் எவரேனும் உரிமை கோர முடியாது. ஆகையினால் இந்த ஐயாயிரம் ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தவொரு பொது மகனும் அரசியல் கட்சியினரை நாட வேண்டிய தேவையில்லை என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post