யாழில் நூறிற்கும் மேற்பட்டவர்களுக்கு நாளாந்தம் பரிசோதனை செய்ய நடவடிக்கை - பணிப்பாளர் - Yarl Voice யாழில் நூறிற்கும் மேற்பட்டவர்களுக்கு நாளாந்தம் பரிசோதனை செய்ய நடவடிக்கை - பணிப்பாளர் - Yarl Voice

யாழில் நூறிற்கும் மேற்பட்டவர்களுக்கு நாளாந்தம் பரிசோதனை செய்ய நடவடிக்கை - பணிப்பாளர்

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றில் உள்ள இரு ஆய்வுகூடத்திலும் இனிவரும் நாட்டிகளில் ஒவ்வொரு நாளும் 100 ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுத் தொர்பான பரிசோதனை நடத்தப்படும்.

பரிசோதனைகளில் தேவைகள் அதிகரிக்கப்படும் பட்சத்தில் 100 ற்கும் அதிகமானவர்களுக்கு இப்பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று யாழ்.போதனா வைத்திய சாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்ப்பாணம் போதானா வைத்திய சாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் இனிவரும் நாட்களில் தினமும் 100 ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும்.

எதிர்காலத்தில் இப்பரிசோதணைகள் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுமாக இருந்தால் 100 ற்கும் மேற்பட்ட பரிசோதனைகளை செய்வதற்கும் தயாராக உள்ளோம். இரு ஆய்வுகூடத்தில் நடைபெறும் பரிசோதனைகள் பாதுகாப்பாகவும்இ சரியா முறையிலும் செய்யப்படுகின்றது.

பரிசோதனைகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் மருத்துவபீட சிரேஸ்ட நிலைய விரிவுரையாளர்கள் மற்றும் வைத்திய சாலையில் உள்ள நுன்னியல் வைத்திய நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுகின்றர்களிடம் மாதிரிகள் பெற்று பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

இதுதவிர மாகாண சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்களுடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post