படகுகளில் கடற்தொழிலுக்குச் செல்வர்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice படகுகளில் கடற்தொழிலுக்குச் செல்வர்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

படகுகளில் கடற்தொழிலுக்குச் செல்வர்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவித்தல்

கொரோனா பரவலை அடுத்து படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரது எண்ணிக்கை 2 பேராக வலைரயறை செய்யப்பட்டிருந்த நிலையில் கடற்றொழிலாளர்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய தொழிலின் தேவைக்கு ஏற்ப கடற்றொழிலுக்கு செல்வதற்கான அனுமதியை கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளார்.

இன்றையதினம் அமைச்சின் அலுவலகத்தில் குறித்த அதிகாரிகளுடன் பேச்சுக்களை மேற்கொண்டு சுகாதார தரப்பினரது ஆலோசனையை பெற்றுக்கொண்டபின்  அமைச்சரால் உரிய அதிகாரிகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய சமூக இடைவெளியை பேணும் முகமாக கடற்றொழிலுக்கு படகில் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்ததை அடுத்து அந்த முறைமையால் தமது தொழில் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவசதாக தெரிவித்து கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்றையதினம் குறித்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை மேற்கொண்டார்.

இதனடிப்படையில் சுகாதார தரப்பிப்பினரது ஆலோசனையுடன் அந்தந்தப் பிரதசங்களின் கடற்றொழில் உதவிப்பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட கடற்றொழில் பணிப்பாளர்களது ஆலோசனைகளுடன் உரிய முறையில் அனுமதி பெற்று தொழில் நடவடிக்கைக்கு தேவையான தொழிலாளர்களுடன் படகுகளில் கடற்றொழிலுக்கு செல்ல அனுமதி வழங்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்புரையை அடுத்து கொரோனா தொற்றை அடுத்து படகில் செல்லும் தொழிலாளர்களது நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்று அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பின்போது கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் கடற்றொழில் சார்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பிலான முன்னேற்ற அறிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இன்வருங்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பிலும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post