யாழில் கொரோனோ நோயாளி ஒருவர் இன்றும் அடையாளம் - கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டவர் - Yarl Voice யாழில் கொரோனோ நோயாளி ஒருவர் இன்றும் அடையாளம் - கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டவர் - Yarl Voice

யாழில் கொரோனோ நோயாளி ஒருவர் இன்றும் அடையாளம் - கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டவர்


யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் பண்டாரநாயக்க மாவத்தைப் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டு பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கே கொரோனோ தொற்று இருப்பது பரிசொதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் 68 பேருக்கு பீசிஆர் பரிசொதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு மாத்திரமே கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றையதினம் பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 8 பேர்.

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 3 பேர்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் - 45 பேர்.

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் - 9 பேர்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு -  ஒருவர்.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்

ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை - ஒருவர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post