யாழில் எந்தவித உதவிகளின்றியும் அவதிப்படும் ஒலி ஒளி அமைப்பாளர்கள் - மாவட்ட செயலகத்தை தொடரபு கொள்ளுமாறு அரச அதிபர் கோரிக்கை - Yarl Voice யாழில் எந்தவித உதவிகளின்றியும் அவதிப்படும் ஒலி ஒளி அமைப்பாளர்கள் - மாவட்ட செயலகத்தை தொடரபு கொள்ளுமாறு அரச அதிபர் கோரிக்கை - Yarl Voice

யாழில் எந்தவித உதவிகளின்றியும் அவதிப்படும் ஒலி ஒளி அமைப்பாளர்கள் - மாவட்ட செயலகத்தை தொடரபு கொள்ளுமாறு அரச அதிபர் கோரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒலி ஒளி சேவையினை வழங்கும் தொழிலாளர்கள் தமக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் எந்தவகையான உதவிகளும் கிடைக்காத நிலமையே கானப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 350ற்கும் மேற்பட்டோர் ஒலி ஒளி சேவையினை வாழ்வாதார தொழிலாக வழங்குவதோடு இவர்களின் கீழ் ஆயிரத்து 500ற்கும் மேற்பட்ட தொரிலாளர்களும. பணியாற்றுகின்றனர்.

இவ்வாறு பணியாற்றுபவர்களிற்கு ஆண்டுதோறும் இடம்பெறும்  ஆலய உற்சவங்கள் மற்றெம் விசேட நிகழ்வுகள் உள்ளிட்டவைகளிலேயே தொரில் வாய்ப்பு ஏற்படும். அதாவது 6 மாதம் தொழில் வாய்ப்பும் 6மாதம் தொழில் இன்மையுமே வழமையாகும்.

இவ்வாறு தொழில் வாய்ப்பு ஏற்படும் காலத்திலேயே தற்போது கொரோனா அச்சம் ஏற்பட்ட திலையில் எங்குமே தொழில் வாய்ப்பு அற்ற நிலமை கானப்படுகின்றது. எனவே மாவட்டச் செயலகங்கள் ஊடாக தொழில் பாதிப்பு இழந்தவர்களிற்கு வழங்கிய 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எமக்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த கோரிக்கை தொடர்பில் யாழ் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசணைத் தொடர்பு கொண்டு கேட்டபோது..

குறித்த தொழில் புரிபவர்களின் குடும்பம் அரச தொழில் அல்லது சமுர்த்திப் பயணாளிகள் பட்டியலில் இல்லையெனக் கண்டறிந்தாள் உடன் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொள்ளும் பட்சர்தில் பிரதேச செயலகங்கள் ஊடாக அதனை ஆராய்ந்து உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனப் பதிலளித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post