கூட்டமைப்பின் ஏமாற்று வித்தைகளை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - தமிழ் தேசிய கட்சி - Yarl Voice கூட்டமைப்பின் ஏமாற்று வித்தைகளை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - தமிழ் தேசிய கட்சி - Yarl Voice

கூட்டமைப்பின் ஏமாற்று வித்தைகளை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - தமிழ் தேசிய கட்சி

தமிழ் மக்கள் மத்தியில் இழந்திருக்கும் செல்வாக்கை தூக்கி நிறுத்தி தம்மை புனிதர்களாக காட்டிக் கொள்கின்ற ஏமாற்று வேலைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தேர்தல் காலங்களில் இப்படியான ஏமாற்று வித்தைகளை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென அக் கட்சியின் துணைத் தேசிய அமைப்பாளர் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

இது விடயம் சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

எமது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிற்-19 எனும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து இன்னமும் முற்றாக விடுபடாத நிலைமையில் நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதென்பது பொருத்தமானதொன்றுஅல்ல இருப்பினும் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்களும்இ அவர் சார்ந்த பொதுஜன பெரமுன கட்சியினரும்இ முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும்இ சில பங்காளிக் கட்சியினரும் பொதுத் தேர்தலை கட்டாயமாக நடத்தியே தீர வேண்டும் என்ற நோக்கத்துடனும் இருக்கின்றார்கள்.

மறுபுறம் நாட்டின் பிரதான எதிர்கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும்இ தமிழர்இ முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுத் தேர்தலை தற்பொழுது நடத்துவதென்பது முறையல்ல நாட்டில் வேகமாக பரவிவருகின்ற கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைந்ததன் பின்னர் தேர்தலை நடாத்தலாம் என்றும் கடந்த ஒரு மாத காலமாக பாரிய இழுபறிகளும்இவிவாதங்களும் ஆளும்கட்சிஇ எதிர்கட்சிகளுக்கிடையே பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வேளையில் இலங்கைத் தேர்தல் திணைக்களமும்இ தேர்தல் ஆணையாளரும் உறுதியான ஒரு முடிவை எடுக்கமுடியாமல் திணரிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலை நாட்டில் நிலவும் போது கடந்த 5ம் திகதி திங்கட்கிழமை நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் அழைப்பின் பெயரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனுமான சந்திப்பு ஒன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்புக்கு முன்னர் அறிவித்ததைப் போன்று நாட்டின் எதிர்கட்சியும்இ அதன் பங்காளிக்கட்சிகளும் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளும்இ தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் பிரதமரின் அழைப்பை நிராகரித்து கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந் நிலையில் கடந்த காலங்களில் ராஜதந்திரம்இ இணக்க அரசியல் என்று நல்லாட்சி அரசுக்கும்இ ஜக்கிய தேசியக் கட்சிக்கும் நீண்ட காலமாக பலமாக முண்டு கொடுத்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மஹிந்தவின் அழைப்பை ஏற்று அவரது கூட்டத்தில் பங்கு பற்றியது மட்டுமின்றி பிரதமரின் இல்லத்திலும் மாலை வேளையில் ஒரு சந்திப்பையும் மேற்கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதென்பது அரசியலில் இவர்களுக்கு புதிய விடயம் அல்ல ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் இவர்கள் சந்தித்திருப்பதென்பது வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் தோல்வி முகத்தில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் ஒன்றை விரைவில் எதிர்கொள்ள இருப்பதால் மீண்டும் தங்களை நியாயமானவர்களாகக் காட்டி தம்மை வழப்படுத்திக் கொள்வதற்காகவே பிரதமருடனான இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர் என்று எம் மக்கள் கருதுகின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தலின் பின் நாட்டில் மீண்டுமொரு அதிகாரம் மிக்க பொறுப்புவாய்ந்த பதவிக்கு வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கும் வாக்குறுதி விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என நாங்கள்  வலியுறுத்துவதோடு வெறுமனமே தங்களினதும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரதும் தேர்தல் ஆதாயம் தேடும் வெற்று வார்த்தையாக இந்த வாக்குறுதி இருக்க கூடாது என்பதையும் பிரதமர் அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எமது இனவிடுதலைக்கான போராட்டம் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் ஆட்சிக்கு வந்த எந்த சிங்கள அரசும் தமிழ் மக்களினாலும்இ அரசியல் வாதிகளுடாகவும் முன் வைக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலைஇ காணாமல் போனவர்களின் விடயம்இ இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பு  போன்ற அனைத்து விடயங்களுக்கும் நிரந்தரமான ஒரு தீர்வை கொடுக்காமல் இன்று வரை இழுத்தடிப்பு செய்து வருகின்றார்கள் என்பதும் இவர்களுக்கு அதே 11 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் முண்டு கொடுத்து வந்திருப்பது மட்டுமல்லாமல் பல முறை சிங்கள அரசு ஆட்சியமைப்பதில் நெருக்கடிகளுக்கு உள்ளாகிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏதோ ஒரு சிங்கள தரப்பினரோடு உறுதியாக பேரம் பேசி எமது பிரச்சனைகளுக்கான ஒரு குறிப்பிட்டளவு தீர்வையாவது எம் மக்களுக்கு  பெற்றுக் கொடுக்காமல் வெறுமனமே சோரம் போனதை அவதானிக்கமுடிந்தது.

இது மட்டுமா எமது போராட்டத்தின் இறுதியில் நடந்த இனபடுகொலைகள்இ மனித உரிமை மீறல்கள்  மீதான விசாரணைகள் சர்வதேசத்தில் நடந்து கொண்டிருந்த போது இலங்கை அரசு சிக்கித்தவிர்த்த போதேல்லாம் இலங்கைக்கான காலஅவகாசத்தையும்இ ஆலோசனைகளையும் வழங்கி உதவியதும் இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இவ்வாறான செயற்பாடுகளால் தான் அதில்  இருந்த பல அரசியல் பிரமுகர்கள் தானாகவே வெளியேறினார்கள் என்பதும் இதனால் தமிழ் மக்கள் இவர்களை அரசியலில் இன்று தோல்வியுற்றவர்களாக பார்க்கின்றார்கள்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மீண்டும் மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக 04 விடயங்களை பிரதானமாக மையப்படுத்திய ஒரு மகஜரை பிரதமரிடம் கையளித்திருக்கின்றார்கள். இந்த மகஜரை பிரதமர் ஏற்றுக்கொண்டதைத் தான் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் திரு.சுமந்திரன் அவர்கள் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன என்று தனது வழக்கமான பாணியில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை இவர் கூறுவது போன்று பிரதமர்  ஏற்றுக் கொண்டிருந்தால் அவரே ஊடகங்களுக்கு கூறியிருக்கலாமே அல்லது எழுத்து மூலம் ஒரு கடிதத்தை கொடுத்திருக்கலாமே ஆகவே இது முற்றுமுழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் வழமை போன்று மக்களை ஏமாற்றி தேர்தலுக்கான வாக்கை சேகரிக்கும் நடவடிக்கையே.

0/Post a Comment/Comments

Previous Post Next Post